யூடியூப் சேனல்களை முடக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார்

231

ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி, மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியானது.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, மாணவியின் பெற்றோர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், அவதூறாக கருத்து பதிவிட்ட யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.