விடைபெறுகிறார் “THOR”

334
Advertisement

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக எட்டு படங்களில் மார்வெல் சூப்பர் ஹீரோ தோரை சித்தரித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், இறுதியாக தோர் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே கடைசியாக இருக்கும் என தெரிவித்துள்ளது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில்,திரைக்கு வரவிருக்கும் ” தோர்: லவ் அண்ட் தண்டர்” தான், காட் ஆஃப் தண்டராக தான் நடிக்கும் கடைசி முறையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த கதாபாத்திரத்திற்கான அவரது உற்சாகம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

2011-ல்  தோர் கதாபாத்திரத்தில்  அறிமுகமானார் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.அதுவே  இவரின் முதல் பெரிய திரைப்பட கதாப்பாத்திரமாகும்.அதையடுத்து இரண்டு சோலோ தோர் படங்களிலும், அவெஞ்சர்ஸ் படங்களிலும் பல ஆண்டுகளாக தோன்றி, அவரை உலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

தோர் கதாபாத்திரத்தில் இனி நடிக்கப்போவதில்லை என்ற கிறிஸ் ஹெம்ஸ்வொர்தின் இந்த முடிவிற்கு அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.