சோதனைகளை கடந்து சாதனை படைத்த ‘நாட்டு நாட்டு’ வலிகளுக்கு கிடைத்த வெற்றி!

332
Advertisement

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில் வெளியான திரைப்படம் RRR.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.

அது மட்டுமில்லாமல், படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி முதல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை ஹிட் அடித்தது.

Golden Globe விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்த நாட்டு நாட்டு பாடல், இன்று ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது.

இப்பாடலுக்கான 90 சதவீத வரிகளை, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஒரே நாளில் எழுதி முடித்த நிலையில் மீதி பகுதியை எழுத 19 மாதங்கள் எடுத்துக் கொண்டார்.

பாடலை கற்றுக் கொள்ள மொத்தக் குழுவிற்கும் 19 மாதங்கள் தேவைப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி அமைத்த 20 tuneகள் பரிசீலிக்கப்பட்டு, இப்போது நாம் கேட்டு இரசிக்கும் tune முடிவு செய்யப்பட்டது.

நாட்டு நாட்டு dance stepக்காக நடனக் கலைஞர் பிரேம் ரக்ஷித் 110 நடன அசைவுகளை கொண்டு வந்தார். இயக்குநர் ராஜமௌலி அங்கீகரித்த நடன அசைவே இறுதி செய்யப்பட்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. 350 நபர்கள் உழைப்பில் 15 நாட்களில் இந்த பாடல் தயாரானது.

பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரண்மனை உக்ரைன் அதிபரின் Mariinsky அரண்மனை ஆகும். நாட்டு நாட்டு நடனத்திற்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR, 18க்கும் மேற்பட்ட  take எடுத்த நிலையில், இரண்டாவது takeஐ படத்தில் வைக்க ராஜமௌலி தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.