உனக்கு 7 எனக்கு 17..கணவரை பற்றி மனம் திறந்த பிரியங்கா சோப்ரா!

195
Advertisement

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார்.

படங்கள் மட்டும் இல்லாமல், பல சர்வதேச தொடர்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த படம் ‘தமிழன்’. அண்மையில், பேட்டி ஒன்றில் பிரியங்கா தனது கணவரை பற்றி பகிர்ந்த தகவல் பேசுபொருளாகியுள்ளது.

உலக அழகி பட்டம் பெறும் போது பிரியங்காவுக்கு வயது 17. அப்போது 7 வயது நிரம்பிய நிக் ஜோனாஸ், தனது தந்தையுடன் டிவியில் நிகழ்ச்சியில் பிரியங்காவை பார்த்ததாக அவரே கூறியுள்ளார்.

தற்போது, இதே விஷயத்தை தனது மாமியார் தன்னிடம் சொன்னதாகவும், இதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை என பிரியங்கா பகிர்ந்துள்ளார். தன்னை விட பத்து வயது குறைவான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை பிரியங்கா 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.