7 நிமிடங்கள் நிற்காத சத்தம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் கண்ணீர் விட்ட ஜானி டெப்..!

246
Advertisement

ஜானி டெப் என்பதை விட கேப்டன் jacksparrowவாக அறியப்படும் இவருக்கு ஹாலிவுட் மட்டும் இல்லாமல் உலக முழுவதும் தனி ரசிகர் படையே உள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையே நிலைத்த Amber Heard உடனான இவரது இரண்டாம் திருமணம், டெப்பிற்கு வாழ்கையையே திருப்பி போட்டது.

இழுபறியாக சென்ற வழக்கு ஒரு வழியாக ஜானி டெப்பிற்கு சாதகமாக திரும்ப, இழந்து போன பட வாய்ப்புகள் மீண்டும் வந்து குவியத் தொடங்கின.

இவர் நடிப்பில் தயாரான ‘ஜான் du barry’ திரைப்படம் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது ஜானி டெப்பை கவுரவிக்கும் விதமாக 7 நிமிடம் வரை அரங்கில் இருந்த அனைவரும் standing ovation கொடுத்தனர். அரங்கமே அதிர்ந்த அந்த 7 நிமிடங்களில் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு ஜானி டெப் கண் கலங்கி நின்ற தருணங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.