Advertisement
சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பைடு, உலகின் முதல் ரோபோ காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் கதவை மூட திறக்க கைப்பிடிகளே இல்லாத இந்த கார், முழுக்க முழுக்க குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய வசதி சரியாக இல்லாத போதும், குரல் கட்டுப்பாடு சீராக செயல்படுவதை உறுதி செய்திருப்பதாக கூறும் பைடு நிறுவனம், இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.