“சீனா ஆபத்துடன் விளையாடுகிறது”

282
  1. ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷியாவின் படையெடுப்பை முறியடிக்க உக்ரைன்னுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.

இதேபோல தற்போது சீனாவும், ஒருங்கிணைந்த சீனா என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது என்றும், அவவ்வாறு சீனா செய்தால், அது ஆபத்துடன் விளையாடுவதற்கு சமம் எனவும் ஜோ பைடன் கூறினார்.


மேலும், தைவான் மீது சீனா படையெடுத்தால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் என்றும் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவங்கள் போராடும் எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.