https://www.instagram.com/reel/CUrLbF2j8Sr/?utm_source=ig_web_copy_link
சிம்பன்ஸி குரங்கு ஒன்று மனிதர்களைப்போல துணிதுவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், மனிதர்களைப்போலவே சிம்பன்ஸி குரங்கு ஒன்று தனது கைகளால் மனிதர்களின் டிசர்ட்டை சலவை சோப் கொண்டு சலவை செய்கிறது.
விலங்குகளிலேயே சிம்பன்ஸிக் குரங்குகள் மிகவும் புத்திசாலிகளாகத் திகழ்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் மனிதர்களின் செயல்பாடுகளைப் பின்பற்றுவதுபோலவே அமைந்திருக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த குரங்கின் செயல் அமைந்துள்ளது.
இதுபோன்ற வீடியோக்கள் முன்பு பல வெளியாகியிருந்தாலும், அண்மையில் வெளியான இந்த வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.
”எனது புதிய பணியாளர்களைக் கண்டேன்” என்று அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
காரணம், சமையல் செய்த பிறகு பாத்திரங்களைக் கழுவுவதும், உடுத்திய பிறகு துணிகளைத் துவைப்பதும் மனிதர்களுக்கு மிகவும் சிரமமான செயலாகத் தோன்றுகிறது.
இந்த சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு டிஸ்வாஷர், வாஷிங் மெஷின் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை.
மனிதர்கள் தங்கள் கரங்களால் பாத்திரங்களைத் துலக்குவதையும் துணிகளைத் துவைப்பதையுமே திருப்தியாகக் கருதுகின்றனர்.
இந்நிலையில், மனிதர்களின் செயல்பாடுகளைப் பின்பற்றி செயல்படும் சிம்பன்ஸிக் குரங்கின் இந்த துணிதுவைக்கும் செயல் வலைத்தளவாசிகளைக் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
எதிர்காலத்தில் சிம்பன்ஸிக் குரங்குகளைத் துணிதுவைக்கப் பழக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.