தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

40

தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனவும் பதிவிட்டார். மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள் படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். விருதுகளை குவித்து தமிழ்த்திரையுலகுக்கு பெருமை சேர்த்துள்ள சூர்யா, சுதா கொங்காரா, ஜிவி பிரகாஷ், அபர்னா மற்றும் சூரரைப்போற்று திரைப்படக்குழுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

Advertisement