ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தாங்கள் தயார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்

270
Advertisement

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தாங்கள் தயராக இருப்பதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், 5 மாநில தேர்தலில் போட்டியிட்ட 6 ஆயிரத்து 900 வேட்பாளர்களில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறினார்.