சென்னை பெருங்குடி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.

273

சென்னை பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் காளிதாஸ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது காளிதாஸ் விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் அவரை காப்பற்ற முயன்றபோது, கால்தவறி விழுந்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.