சென்னை பறக்கும் ரயில் சேவை – திடீர் டிவிஸ்ட்.

95
Advertisement

சென்னை மாநகர் எப்போதுமே பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் மின்சார ரயில் சேவை.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளுக்கு சாமானிய மக்களில் இருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பணிகளுக்கு செல்லும் நபர்களுக்கு கட்டணத்தை குறைக்கும் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் அமைந்துள்ளது. தற்போது சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை சுற்றி முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை மாநகராட்சி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களின் தரத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தின் பின் தொடரவும்

இதனிடையே நான்காவது வழித்தடமாக சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவையை வழங்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட்டது.அதனையடுத்து ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது. மேலும் சேப்பாக்கத்தில் இருந்து வேலை செய்து வரை ரயில் சேவை வழக்கம் போல தொடரும் எனவும் கூறப்பட்டிருந்தது.