எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

299

2015-22 காலக்கட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதில் சில செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள 23 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் அந்தந்த ஊர் பெயருடன் எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்டத்தைச்சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள், உள்ளூர் தலைவர்கள், வரலாற்று சம்பவம் அல்லது புவியியல் அடையாளம் உள்ளிட்டவை அடிப்படையில் பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனைகளும் 3 முதல் 4 பெயர்களை காரண காரியங்களுடன் பரிந்துரை செய்துள்ளன.