சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்

299

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை களைகட்டிய நிலையில், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அதிகளவில் மக்கள் குவிந்தனர். நேற்று மாலை முதலே சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் கடற்கரையில் குவிந்த மக்கள், இரவு வரை மெரினா கடற்கரையில் பொழுதை கழித்தனர். கடலில் இறங்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் மெரினாவில் உள்ள கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். மெரினாவில் அதிக அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.