பூனை மீசை மூலிகை

495
Advertisement

உடல் ஆரோக்கியம் தருவது உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்
குணங்களைக் கொண்டுள்ளது பூனை மீசை மூலிகை..

சிறுநீரக செயல் இழப்புப் பிரச்சினைகளைப் போக்குகிறது.
சிறுநீரக செயல்திறனை அதிகரிக்கிறது.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வாதநோய், சுகர், பிளட் பிரஷர், காக்கா வலிப்பு, மாதவிடாய்க் கோளாறுகள்,
பித்தப்பைக் கற்கள், சிறுநீரகக் கற்கள், கல்லீரல் வீக்கம் உள்ளிட்ட பல
நோய்களைக் குணமாக்கும் அற்புத மூலிகை.

உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு, தேவையற்ற உப்புகளை உடலில்
இருந்து வெளியேற்றுகிறது. இதனால், அதிகப்படியான உடல் எடை குறைகிறது.

கிட்னிக் குறைபாடுள்ளவர்களின் உடலில் உள்ள தேவையற்ற
உப்புகளை வெளியேற்றி, டயாலிசிஸ் செய்வதைத் தவிர்க்கிறது.

ஹை சுகர், லோ சுகர் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

க்ரீன் டீ குடிப்பதுபோல் தினமும் பூனை மீசை மூலிகைத் தேநீர்
குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நோயாளிகள்
மட்டுமன்றி, ஆரோக்கியமாக உள்ளவர்களும் இந்த டீ குடிக்கலாம்.
தினமும் இரண்டு வேளை இந்த டீ பருகிவந்தால், பல்வேறு நோய்த்
தொந்தரவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

மலேசியா, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில்
தேநீராக அருந்தப்படுகிறது.

கிட்னி டீ, ஜாவா டீ ஆகிய பெயர்களில் ஐரோப்பாவில்
இந்த டீ விற்கப்படுகிறது.

ஒன்றரை டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 2 டீஸ்பூன்
அளவு அல்லது 5 கிராம் அளவு இந்த மூலிகையைப் போட்டு மூடிவைக்க வேண்டும்.
கிட்னி டீ தயார்.

20 நிமிடங்களுக்குப் பிறகு, வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

சரி, இந்தப் பூனை மீசை மூலிகை எது தெரியுமா…?
சொன்னா ஆச்சரியப் படுவீங்க…

சீரகத் துளசி தான் அந்த மூலிகை.

பூனையின் மீசைபோல இதற்கும் உள்ளதால் இப்படி அழைக்கப்படுகிறது.