எப்ப வேணா தலையில ராக்கெட் துண்டு விழலாம்….மண்ட பத்திரம்

243
Advertisement

அறிவியல் ஆராய்ச்சியில் உலக நாடுகளின் ஆர்வம் அதிகரித்து கொண்டே போவதன் விளைவாக, எண்ணற்ற செயற்கை கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்டு வருகின்றன.

செயற்கை கோள்கள் செலுத்தப்பட்ட பின் வெடித்து சிதறும் ராக்கெட்டுகளின் சில பகுதிகள் கடலில் விழுந்தாலும் பல பகுதிகள் விண்வெளியிலேயே சுழன்று கொண்டிருப்பதாக கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இதுவரை கிட்டத்தட்ட ஒன்பதாயிரத்து தொள்ளாயிரம் டன்கள் வரை ராக்கெட் கழிவுகள் பூமியின் சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், இந்த உதிரிபாகங்கள் கீழே விழக்கூடும் எனவும், இதனால் மக்கள் தாக்கப்படும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், இது போன்ற ஆபத்துகளை தவிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.