டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியானதில் இருந்தே எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் இணைந்துள்ள நட்சத்திர பட்டாளத்தின் சுவாரஸ்ய நடவடிக்கைகள் சமூகவலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் டட் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றதை அடுத்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில், அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் படங்களை பார்த்த ரசிகர்கள், படத்தின் கதாபாத்திரத்திற்காக சஞ்சய் டட் பிரத்யேக உடற்பயிற்சி ஏதும் மேற்கொள்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.