கோடைகாலத்துக்கு ஏற்ற பழ வகைகள் என்ன ?

200
Advertisement

கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்து அதிகம் குறையும் எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளலாம். இதனால் சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.உடலில் உள்ள நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு அதிக அளவு பழங்களை சாப்பிடுவதும் நன்மை பயக்கும் . எந்த வகைப் பழங்களை சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம்.

முலாம் பழம்
நீர்ச்சத்து மிகுந்த பழங்களில் முலாம் பழமும் ஒன்று. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது . வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தவறாது சாப்பிடலாம்.

சிட்ரஸ் பழங்கள்
திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனி போன்ற புளிப்பு சுவையுடைய பழங்களைச் சாப்பிடலாம். இதன் மூலம் அதீத வெப்பத்தால் ஏற்படும் சோர்வு நீங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Advertisement

தர்பூசணி:
இதில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் வறட்சி உடனே ஈடு செய்யப்படும்.பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது