தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

292
Hardboiled eggs on a plate
Advertisement

ஒரு மனிதனுக்கு புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய உணவுகளில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது . இதில் அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் இருப்பதால் மிகச்சிறந்த புரத உணவாகச் கருதப்படுகிறது . வேகவைத்த முட்டை எளிதில் ஜீரணமாகக்கூடியது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் A சத்து அதிகமுள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் அவர்களது புரதத்தேவை முற்றிலும் கிடைத்துவிடும் .

பெரியவர்கள், கொலஸ்ட்ரால் இருக்கும்பட்சத்தில் வாரத்துக்கு 3 நாள்களுக்கு மஞ்சள் கருவோடு ஒரு முட்டை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் தினமும் ஒன்று எடுத்துக்கொள்ளலாம் .சிலருக்கு பச்சை முட்டை சாப்பிட்டால் நல்லதா என்ற சந்தேகம் இருக்கும்,பச்சை முட்டை உடலுக்கு ஏற்றதல்ல என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.அதற்க்கு பதிலாக வேகவைத்தோ ,ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம் .