பூச்சூடுவதால் உண்டாகும் பலன்கள்

252
Advertisement

பெண்கள் தலையில் பூச்சூடுவது நம் நாட்டின் வழக்கங்களுள் ஒன்று.
வீட்டில் இருந்தாலும் விழாக்களுக்குச் சென்றாலும் தலையில் பூச்சூடுவது
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

தலையில் பூச்சூடுவதால் பூச்சூடும் பெண்களுக்கு நிறைய நன்மைகள்
ஏற்படுகின்றன.

ரோஜாப் பூவைத் தலையில் வைத்துக்கொள்வதால் தலைச்சுற்றல்,
கண் நோய் போன்றவை ஏற்படாது. ஒருவேளை இந்த நோய்கள்
இருந்தாலும் ரோஜாவைப் பூக்களைத் தலையில் வைத்துக்கொண்டால்,
அவை உடனே குணமாகிவிடும்.

மல்லிகைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வதால் மனம் அமைதியடையும்.
கண்கள் குளிர்ச்சியாகும்.

செண்பகப் பூ சூடிக்கொள்வதால் பார்வைத் திறன் அதிகரிக்கும். வாதமும்
குணமாகும்.

காது சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகப் பாதிரிப் பூ சூடிக்கொள்ளலாம்.
பாதிரிப் பூ சூடிக்கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். கண் எரிச்சல் நீங்கும்,
காய்ச்சல் குணமாகும்.

செம்பருத்திப் பூ வைத்துக்கொண்டால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள்
நீங்கும். உடல் சூட்டையும் தணிக்கும்.

தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகல மகிழம் பூவைத் தலையில் சூடிக்
கொள்ளலாம். மேலும், பல் வலி, பல் சொத்தை போன்ற பிரச்சினைகளையும் தீர்க்கும்.

வில்வப் பூ சூடிக்கொண்டால் சுவாசக் கோளாறுகள் நீங்கும். காச நோயும் குணமாகும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், தலைவலி நீங்கவும் சித்தகத்திப் பூவை
சூடிக்கொள்வது சிறந்தது.

தாமரைப் பூச்சூடி தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளைப் போக்கிவிடலாம்.
மன உளைச்சலைப் போக்கவும், மனம் அமைதி பெறவும், தூக்கமின்மை அகன்று
ஆழ்ந்த தூக்கம் வரவும் தாமரைப் பூ சூடுவது நல்லது.

தலைச்சுற்றல், தலைபாரம் இருப்பவர்கள் கனகாம்பரப் பூ சூடிக்கொள்ளலாம்.

பெண்களுக்குப் பூச்சூடுதல் என்பது மிகவும் விருப்பமான ஒன்று. ஆனால்,
நாகரிகம் கருதிப் பல பெண்கள் பூச்சூடுவதில்லை. பூச்சூடுவதால் உண்டாகும்
நற்பலன்களை மனதில்கொண்டால் பூச்சூடுவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
பூச்சூடுவது என்பது கௌரவமான, மகிழ்ச்சியான செயல்தான்.

உடலுக்கும் மனதுக்கும் நன்மைகளையே தரும் எனும்போது பூச்சூடிக்கொள்ள
ஏன் தயங்க வேண்டும்?