பாய்ந்தோடும் மூங்கிலின் வியப்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதனைப் பார்ப்பதற்கு பாம்பு விரைந்து செல்வதுபோல உள்ளது.
பொதுவாக, வாகனப் போக்குவரத்து மனிதர்களுக்கு மட்டுமன்றி,
சரக்குப் போக்குவரத்துக்கும் இன்றியமையாதது.
போக்குவரத்து செலவு காரணமாகவே பல பொருட்களின் விலையும்
அதிகமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத,
மனிதர்களும் செல்வ கடினமாக உள்ள வனப்பகுதியில்
சரக்குப் போக்குவரத்துக்கு வழிசெய்துள்ளது இயற்கை.
அத்தகைய வழி ஒன்றைத்தான் நீங்கள் இங்கு பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
காட்டில் வெட்டப்பட்ட மூங்கில் கழிகளைத் தலைச்சுமையாகக்
கொண்டுசெல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். அதிக நேரமும் ஆகும்.
அதிக வேலையாட்களும் தேவைப்படுவர். செலவும் அதிகமாகும்.
இத்தகைய எந்த சிரமமும் இல்லாமல் காட்டில் உள்ள மரத்துண்டுகளைக்
கொண்டுசெல்லப் பயன்படும் இந்த இயற்கை டிரான்ஸ்போர்ட்
மூக்கின்மேல் விரலை வைத்து வியக்க வைக்கிறது.
மூங்கில் கழிகளை ஒன்றாக வைத்து, அவற்றின் முனையில் கொடிகளால்
கட்டி இழுத்து வந்து, சிறிய ஆறு ஒன்றின்மீது உருளைபோல்
அமைக்கப்பட்டுள்ள கம்பின்மீது வைக்கிறார் ஒருவர்.
உடனே அது வழுக்கிக்கொண்டே போய் ஓரிடத்தில் சென்று சேருகிறது.
வியப்பான இந்த எளிமையான டிரான்ஸ்போர்ட் வீடியோ
சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.