விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப அனுமதி கேட்ட க்யூட் பேபி

378
baby
Advertisement

விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட க்யூட் பேபியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கப்தான் இந்துஸ்தான் விமான நிறுவனம் இந்த வீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று அந்தக் குழந்தை தனது அத்தையை வழியனுப்ப அனுமதி கேட்கிறது. அதிகாரிகளும் அதற்கு அனுமதியளித்த நிலையில், கடகடவென அத்தையை நோக்கி விரைந்து செல்கிறது. அதைப் பார்த்த குழந்தையின் அத்தை ஓடிவந்து குழந்தைத் தூக்கி அரவணைத்து முத்த மழை பொழிகிறார்.

கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றுள்ள அந்தக் குழந்தையின் செயல் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துவருகிறது.