விருதுகளை விற்ற நடிகை !

135
Advertisement

1994 ஆம் ஆண்டில் ‘சேலஞ்ச்’ படத்தில் அறிமுகமானவர்
தெலுங்கு நடிகை சியாமளா. அதன்பின் ‘சுவரணகமலம்’,
‘பாபாய் ஓட்டல்’, ‘கோதண்ட ராமுடு’, ‘இந்திரா’,
‘கட்சும் கவுரி’, ‘பிளேடு பாப்சி’, ‘ரெயின் பாப்’,
‘குண்டூர் டாக்கீஸ்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டில் ‘மதுவடலரா’ என்னும் படத்தில்
நடித்திருந்தார். அதன்பிறகு, கொரோனா வைரஸ் பரவத்
தொடங்கியதால், பட வாய்ப்புகள் இன்றி வருமானம்
இல்லாமல் தவிப்பதாகக் கூறியிருந்தார். இவரது கஷ்டத்தை
அறிந்த பவன் கல்யாண் ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்.

ஆனாலும், தனக்கு வழங்கப்பட்டிருந்த நான்கு விருதுகளைக்
கஷ்டம் காரணமாக விற்பனை செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாகக் கூறிய சியாமளா, ”எனக்கு மாதம்
10 ஆயிரம் ரூபாய் மருத்துவச் செல்வுக்குத் தேவைப்படுகிறது.
எனக்கு காச நோய் உள்ளது. என் மகளும் உடல்நலமின்றி
இருக்கிறாள். எனவே, எனது அத்தியாவசியத் தேவைக்காக
எனக்கு வழங்கப்பட்ட அனைத்து விருதுகளையும் விற்று
விட்டேன்”என்று வருத்தமுடன் கூறியிருக்கிறார்.
இவரது கணவர் முன்பே மரணமடைந்துவிட்டார்.