டி.ஆர். பாலு “மருமகள்” சொன்னதை கவனிச்சீங்களா.. அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றதுமே.. ஓடோடி வந்த மகன்….

135
Advertisement

டி.ஆர். பாலு “மருமகள்” சொன்னதை கவனிச்சீங்களா.. அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றதுமே.. ஓடோடி வந்த மகன்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணாமல் இருந்தது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது, ஆவின் பால் கொள்முதலில் ஏற்பட்ட விமர்சனங்கள் ஆகியவை நாசருக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்தனர்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் தலைவலி விமர்சனங்கள் கட்சித் தலைமைக்கு புதியதை ஏற்படுத்தியது. இந்த விமர்சனங்களை பயன்படுத்திக்கொண்டு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்ய தொடங்கின.