தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

199
Advertisement

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 132 பேரும், கோவையில் 43 பேரும், கன்னியாகுமரியில் 41 பேரும், செங்கல்பட்டில் 31 பேரும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 26 பேரும், சேலத்தில் 23 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 301 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.