ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் எது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

115
Advertisement

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் பொதுமக்கள் ஆதாருடன் எந்த மொபைல் எண்ணை இணைத்தோம் என்பதை அறியாமல் இருப்பதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு  தகவல்கள் வந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், mAadhaar என்கிற செயலி மூலம் மக்கள் சரிபார்த்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.