சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை-போலீசாரை அதிர்ச்சி

277

குருகிராம் பகுதியில் சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யும் தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குருகிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மூன்று பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டன.

கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு என்று அந்த மொபைல் எண்ணில் இருந்து மக்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளும் அனுப்பப்பட்டன. கலா ஜாத்தேரி என்ற ரவுடியின் பெயரை குறிப்பிட்டு சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யப்படுவதால் இளைஞர் சமுதாயம் ஆபத்தில் உள்ளது.

இந்த விளம்பரங்கள் குறித்தும், யார் இதனை செய்கிறார்கள் என்பது குறித்தும் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.