மாஸ்டருக்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்

196
Advertisement

2012யிலேயே ‘பெருமான்’ படத்தில் அறிமுகமான அர்ஜுன் தாஸ், ‘கைதி’ படத்தில் நடிகராக பார்க்கப்பட்டாலும், ‘மாஸ்டர்’ படத்தில் தான் முழு கவனம் ஈர்த்தார்.

2017இல் மலையாளத்தில் ஹிட் அடித்த அங்கமலி டைரிஸ் என்ற படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

கேடி என்ற கருப்புதுரை படத்தை இயக்கிய மதுமிதா சுந்தரராமன் இயக்கும் இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இதையடுத்து, அர்ஜுன் தாஸ் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில் தான் நடிக்கவில்லை என்றால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனவும், projectஇல் கையெழுத்திட்ட உடன் தனது பெற்றோர், லோகேஷ் மற்றும் விஜய்க்கு தான் முதலில் தகவல் கூறியதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.