HEAD PHONE பயன்படுத்துபவரா நீங்கள்? அதிர்ச்சித் தகவல்கள்

293
Advertisement

இன்று ஹெட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம்.
ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்களைவிட பாதிப்புகள்
அதிகம் என்பதைப் பலர் அறிந்திருக்கவில்லை.

நமது காதுகளால் 65 டெசிபல் வரை ஒலியைத் தாங்க முடியும். ஆனால்,
நாம் பயன்படுத்தும் ஹெட்போனின் ஒலி 100 டெசிபல் ஆகும். 100 டெசிபல்
ஒலியைத் தொடர்ச்சியாக 10 மணி நேரத்துக்குமேல் ஹெட்போனில் கேட்டால்
காது கேளாத நிலையை அடைந்துவிடுவோம்.

ஹெட்போன் பயன்படுத்தினால் காதுகளிலுள்ள செல்களின்மீது மிகவும்
தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனைத் தொடர்ந்து
10 நிமிடம் பயன்படுத்தினால் காதுகளிலுள்ள செல்கள் சிதைகின்றன.
அதேபோல, வேகமாக பாக்டீரியாக்களும் தோன்றுகின்றன.

ஹெட்போன் பயன்படுத்தினால் தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம்
போன்றவை ஏற்படுகின்றன.

சில நிமிட சந்தோஷத்துக்காக நிரந்தர இழப்பு ஏற்படுவதை எதிர்கொள்ளலாமா?