மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயலால் குவிந்த பாராட்டு

202

திருவள்ளுர் அருகே, அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக 9 அடி உயரமான இந்திய வரைப்படத்தில் பள்ளி மாணவர்களின் கைரேகை வைத்து வரைந்தது அனைவரையும் கவர்ந்தது. திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வருகை புரிந்து 9ம் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி பள்ளி மாணவர்கள் சார்பில் 9 அடி உயரமுள்ள இந்திய வரைபடம் வரைந்து, அதில் அவரது உருவப்படத்தில் 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களின் கைரேகை பதித்தனர்.

இதனையடுத்து, அப்துல்கலாம் வழியில் நேர்மையுடனும், உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் என்றும் வெற்றி நடை போடுவோம் என மாணவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு வண்ணம் திட்டியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.