கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..!

50
Advertisement

10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும், அரசு ஊழியர்களை போன்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 3ஆம் கட்டமாக நேற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே, அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நீடித்த நிலையில், சாலையிலயே படுத்து உறங்கி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.