சேலம் அருகே, மூலிகையின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது….

142
Advertisement

மூலிகையின் அவசியம் மற்றும் மருத்துவ குணம் குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் திடலில் அரிய வகை மூலிகை கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை துணை இயக்குனர் முருகேஸ்வரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில், கடுகு, ரோகிணி, செவ்வியம், முத்து சிற்பி, சிவகரந்தை உப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிய நிலவேம்பு கசாயத்தில் பயன்படுத்தப்பட்ட மூலிகை பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.