நரை முடி பிரச்சனைக்கு தீர்வு தரும் நெல்லிகாய் சாறு

288
Advertisement

ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் முக்கிய பங்குவகிப்பது அனைவரும் அறிந்ததே.நெல்லிக்காய் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்-சி , பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலை முடிக்கும் நெல்லிக்காய் பயனுள்ளதாக இருக்கும்.வெள்ளை முடி பிரச்சனையை தீர்க்க நெல்லிக்காய் ஜுஸ் மிகவும் சிறந்தது.

குளிப்பதற்கு முன் நெல்லிக்காய் சாற்றை தலைமுடியில் நன்கு தடவி ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஷாம்பு போட்டு அலசவும் . குறைந்தது மூன்று மாதங்களுக்கு இதைச் செய்தாள் நரை முடி பிரச்சனை தீரும்.மருதாணியில் நெல்லிக்காய் ஜூஸை கலந்து தலையில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குளித்தால் தலை முடி இயற்கையான கருப்பு நிறத்திற்கு வரும் .


நெல்லிக்காய் அதீத குளிர்ச்சி தன்மை கொண்டது ஆகவே இதை பயன்படுத்துமுன் மருத்துவரை ஆலோசிப்பது அவசியமாகும்.