மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

352

ஒக்லஹாமா மாகாணத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில், 4 பேர் உயிரிந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க அதிபர் ஜோபைடன் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளார்.

அண்மையில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பள்ளி குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.