வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை

306

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வதந்தி பரவியது.

இதனால் அங்கு குவிந்திருந்த ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நியூயார்க் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.