ஆந்திராவில் உதயமான புதிய மாவட்டம் – பெயர் என்ன தெரியுமா?

262

ஆந்திராவில் புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு ‘அம்பேத்கர் கோணசீமா’ என பெயர் வைப்பதற்கான தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது ஜெகன் மோகன் ரெட்டி அரசு.

சாதியவாத சனாதனிகளின் வன்முறைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள அம்மாநில முதல்வர் ஜெகன்மோகனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மனமார்ந்த நன்றி என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.