செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இந்த அனைத்தும் நடக்கும்…

109
Advertisement

நமது முன்னோர்கள்  சமையலுக்கு தேவையான உணவு  பொருட்களைச் சேமித்து வைப்பதற்குச்  செப்பு  பாத்திரங்களைதான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள்.

தண்ணீரையும்  செப்பு  பாத்திரங்களில் தான்  சேமித்து  அருந்தி வந்தார்கள். ஆனால் நாகரீகம் என்ற பெயரில்  செப்பு  பாத்திரங்களை  புழக்கத்தில் இருந்து  அப்புறப்படுத்திவிட்டன.  அதற்கு பதிலாக பிளாஸ்டிக்  பொருட்கள் புழக்கத்திற்கு வந்தது.

பிளாஸ்டிக்  பொருட்களில்  பல ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றன, இதனை அறிந்த பெரும்பாலானோர்  மீண்டும்  செப்பு  பாத்திரங்களை  பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள், அயல் நாடுகளில்  கூட  செப்பு  பாத்திரங்கள் புழக்கத்திற்கு  வந்துவிட்டன,  தற்போது குடிநீர்  பாட்டில்கள்  சமையல்  பாத்திரங்கள், உணவு  பொருட்களை  சேமிக்கும்  பாத்திரங்கள் , என  செப்பு பொருட்கள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி  உள்ளது.

செப்பு  பாட்டில்களில் தண்ணீர் குடித்தால் நுண்ணிய  ஊட்டச்சத்துகள்  கிடைக்கும், நோய்  எதிர்ப்பு அமைப்பை  வலுப்படுத்தி, செரிமானம் சீராக நடைபெறவு உதவும்,  புற்றுநோய்  அபாயத்தையும்  குறைக்கும். செப்பு பாத்திரத்தில் சேமித்து  வைக்கப்படும்  நீரை  குடித்தால்  உடல்  குளிர்ச்சி அடையும், உடலில்  உள்ள  நச்சுக்களை  நீக்கி  அமில, கார  சமநிலையை பராமரிக்கும்., சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்கள், காய்கறிகள் , உணவுகள் என அனைத்தையும் செப்பு பாத்திரங்களில் பாதுகாக்கலாம். மேலும் செப்பு பாத்திரத்தில் இரவில் நீரை ஊற்றி வைத்துவிட்டு காலையில் பருகுவது நல்லது என, ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும் எனவே இவர்களின் நோய்  எதிர்ப்புச்  சக்தியை அதிகரிக்கச் செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவு  பொருட்களில் பாக்டீரியாக்கள்  பெருகுவதை  தடுக்கும்  ஆற்றலும்  கொண்டது. பாக்டீரியாக்கள்  மூலம்  ஏற்படும் நோய் தொற்றுகளையும் தடுக்கும்.