கருத்துக் கணிப்புகள் பொருட்டல்ல நாங்கள்தான் வெல்வோம் – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

210
Advertisement

நடந்து முடிந்த உ பி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகளை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், “கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலை காட்டட்டும், ஆனால் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்”எனக் கூறியுள்ளார் .நாளை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.