கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

265
Advertisement

கேரளாவை சேர்ந்த ஏ.கே.அந்தோணி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார் .இவர் ராஜீவ்-சோனியா குடும்பத்துக்கு மிகுந்த நெருக்கமானவர்.
81 வயதாகும் ஏ.கே.அந்தோணி தற்போது மாநிலங்களவை MP ஆக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந்தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏ.கே.அந்தோணி அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எனக்கு வயதாகி விட்டது. எனவே நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்வு பெற விரும்பவில்லை. தனக்கு பதிலாக இளைஞர் ஒருவருக்கு கட்சி வாய்ப்பளிக்க வேண்டும். நான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க விரும்புகிறேன். ஆனால் கேரளாவில் கட்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். இனிமேல் டெல்லியில் இருக்கமாட்டேன்’ என தெரிவித்தார்.