லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்கள்

494
Advertisement

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பிரசவத்திற்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ளார் . ஆஸ்பத்திரியில் இருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பிரசவம் பார்ப்பதற்கு ரூ 2,000 லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். லஞ்சம் தர அந்த பெண்ணிடம் பணம் இல்லாததால் அவர் தரவில்லை என தெரிகிறது . இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.
பிறகு செவிலியர்கள் தாயுக்கும்,சேய்க்கும் எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பதறியடித்து ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள செவிலியர்களிடம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதற்கான சான்று தருமாறு கேட்டனர்

அதற்கு அவர்கள் மழுப்ப, அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் ரூ 2,000 லஞ்சம் தராததால் இளம் பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதாக பொய் கூறியதாக ஒப்புக்கொண்டனர். பொய் கூறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு உறுதி அளித்துள்ளனர்.