விண்வெளியில் விவசாயம்; அசத்திய நாசா

252
Advertisement

சவாலான விஷயங்களை சர்வசாதாரணமாக நிகழ்த்தி வருகிறது
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.

அந்த வகையில், விண்வெளியில் விவசாயம் செய்து உலகோரின்
வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

நாசா சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், விஞ்ஞானிகளின்
உணவுத் தேவைக்காக சோதனை முயற்சியாக மிளகாய்ச் செடி,
மிளகுக் கொடியைப் பயிரிட்டுள்ளனர். இந்த முயற்சிக்குப் பலன்
கிடைத்துள்ளது.

தற்போது மிளகாய்ச் செடிகளும் மிளகுக் கொடிகளும் நன்கு
வளர்ந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்தச் செடிகளுக்கான விதைகள் தலையணையில் விதைக்கப்பட்டு
அதிலேயே உரமிடப்பட்டு தண்ணீரும் பாய்ச்சப்பட்டது. தலையணையில்
நாற்றங்கால்போல பயிரிடப்பட்டதால், எல்லா செடிகளுக்கும்
சரிசமமாகத் தண்ணீரும் உரமும் கிடைத்தது-

விண்வெளியில் தாவரங்கள் வளருமா என்பது குறித்தான
நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முயற்சியில் முதல்படியாக
ஏற்கெனவே முள்ளங்கியை வளர்த்து வெற்றிகண்டுள்ளனர்.
தற்போது மிளகாய்ச் செடியும் நன்கு வளர்ந்திருப்பது நாசா
விஞ்ஞானிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும்
தந்துள்ளது-

புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தாவரங்கள் நன்கு
வளர்ந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு புதிய உத்வேகத்தைத் அளித்துள்ளது.
பயிரிட்ட பிறகு மனிதர்களின் முயற்சி பெரியளவில் ஏதுமின்றி
இவை வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.