விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் – கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன்

233

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.

மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து, சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி வன்முறை, மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிறப்பு புலனாய்வு குழுவும், சிபிசிஐடி-யும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மாணவி ஸ்ரீமதி உடலை பெறுவது தொடர்பாக, பெற்றோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய எஸ்.பி பகலவன், பள்ளி வன்முறைக்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.