ஆரிஃப் கானை அடுத்து வைரலாகும் நாரை நண்பர் ராம்! இந்த நாரையாவது தப்புமா?

203
Advertisement

உயிரை காப்பாற்றிய ஆரிஃப் கானின் உற்ற தோழனாக மாறிய சாரஸ் இன நாரை பறவை அவருடனேயே வாழ்ந்து வந்தது. பைக்கில் போகும் போது ஆரிஃப்புடன் நாரை சென்ற வீடியோ வைரல் ஆகவே, பிறகு இயற்கையான சூழலில் இருக்க வேண்டும் என நாரையை வனத்துறையினர் கான்பூர் உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்த்தனர்.

கள்ளம்கபடமில்லாத நட்பு பிரிக்கப்பட்டதாக பலரும் பரவலாக கருத்து பதிவிட்டு வர, இன்னொரு நாரை நட்பு கதை வைரல் ஆகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பரைபுர் மாலிக் கிராமத்தை சேர்ந்த ராம் சாமுஜ் யாதவ் பசியாய் இருந்த சாரஸ் இன நாரை ஒன்றிற்கு உணவு வழங்கியுள்ளார்.

அதன் பின், அந்த நாரை அவரது வயலில் மகிழ்ச்சியாக விளையாடி வருவதோடு ராமுடனும் நட்புடன் பழகி வருகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகவே, இந்த நாரையாவது தப்புமா அல்லது வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி பூங்காவில் ஒப்படைத்து விடுவார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.