58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல், இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு மறுஅடக்கம் செய்யப்படவுள்ளது….

137
Advertisement

அமெரிக்க ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி வகித்தவர் ஹாரி கிளீன்பெக் பிக்கெட்.

1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்த இவர், இந்தியாவின் டார்ஜிலிங்குக்கு வந்திருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் 58 ஆண்டுகளுக்கு முன்பு சிங்டம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை அமெரிக்காவில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், ஹாரியின் உடல் அமெரிக்காவின் ஆர்லிங்டன் தேசிய கல்லறை தோட்டத்தில் மறுஅடக்கம் செய்யப்படும் என அமெரிக்க துணைத்தூதர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க கான்சல் ஜெனரல் மெலிண்டா பாவெக் கூறுகையில், “அமெரிக்க அரசு பொது ஊழியர்களாகிய எங்கள் முதல் முன்னுரிமை அமெரிக்க குடிமக்களைப் பாதுகாப்பதும் ஆதரவளிப்பதும் ஆகும்.

“இந்திய அரசு மற்றும் மேற்கு வங்க மாநிலத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஆதரவிற்கு நானும் எனது குழுவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், இதனால் அவர் திரும்பி வருவதை சாத்தியமாக்கினோம்” என்று அது கூறியது.