“ஆப்கன் மக்களுக்காக இதை செய்யுங்கள்”

340
taliban
Advertisement

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

தாலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வரும்நிலையில், தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்களது குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என தப்பிச் செல்லும் நபர்களிடம் கொடுத்து அனுப்பிய காட்சிகள் நெஞ்சை கனக்க வைக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்படுகின்றனர்.

Advertisement

ஆனால், விமானநிலையம் செல்ல முடியாமல், தாலிபான்கள் மக்களை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக தங்களின் எல்லைகளைத் திறந்துவைக்க வேண்டுமென்று, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மன்டூ வேண்டுகோள் விடுத்துள்ளார். நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கும் பதற்றமானன சூழலைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.