https://www.instagram.com/p/CPryCN7LPz2/?utm_source=ig_web_copy_link
பாடகியாக இருந்து நடிகை ஆனவர் ஆண்ட்ரியா.
ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நடிகை ஆண்ட்ரியா
அரக்கோணத்தில் பிறந்தவர்.
புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவராம். இதுபற்றி
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள, ”ஆண்ட்ரியா,
நான் சிறுமியாக இருந்தபோது ஒரு நாளும் என் பெற்றோர்
என்னை திரைப்படத்துக்கு அழைத்துச்செல்லவில்லை.
எனவே, புத்தகம் படிப்பதிலேயே என் கவனம் சென்றது.
குழந்தைப் பருவத்தில் இனிட்பிளைட்டன், மார்க்டுவெய்ன்
எழுதிய புத்தகங்களே என்னை நல்வழிப்படுத்தின.
இந்த உலகத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் புத்தகம்
மூலமே அறிந்துகொண்டேன். கல்லூரியில் பயிலும்போது
வார இறுதி நாட்களில் ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ என்னும்
புத்தகத்தை வாசிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்தேன்.
மார்க்கரெட்டட்வுட் என்னும் புத்தகத்தைக் கல்லூரிக் காலம்
முழுவதும் வாசித்தேன்” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்தை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அவரது
ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சென்னையிலுள்ள குருநானக்
கல்லூரியில் பயின்றவர் ஆண்ட்ரியா.
தற்போது யோகாசனம் செய்வதில் ஆர்வமாக உள்ளார்.
தான் யோகாசனம் செய்யும் படங்களையும் வெளியிட்டுள்ளார்.