நடிகை கவுதமியின் வங்கி கணக்குகள் முடக்கத்தை நீக்கியது நீதிமன்றம்

280
Advertisement

நடிகை கவுதமி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் , அதில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016-ம் ஆண்டு 4.10 கோடிக்கு விற்றதாகவும்

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி என மதிப்பிட்டு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உத்தரவினால் தனது 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் , இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டதால் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, கவுதமியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்த நீதிபதி, விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.