மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை – கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

293

மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பகலவன், வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, சிபிசிஐடி விசாரணைக்கு மாவட்ட காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்தார். மாணவியின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை முடிவடைந்ததால், உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். மாணவியின் இறுதிச்சடங்கு அமைதியாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் எஸ்.பி. பகலவன் கூறினார்.