
ஆஸ்திரேலியாவில் இடைவிடாமல் கொட்டு வரும் கனமழையால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பிரிஸ்போன் மற்றும் சிட்னி ஆகிய இரு நகரங்களும் கனமழையால் பேரழிவுகளை எதிர்கொண்டு வருகின்றன. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கி உள்ளன. 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கனமழை, பெருவெள்ளம் காரணமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளதோடு, தகவல் தொடர்பு, சாலை போக்குவரத்து ஆகியவையும் முடங்கி உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் பலர் மாயமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.