அப்படியே அஜித் மாதிரியே…வைரலாகும் குட்டி தலையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

229
Advertisement

கடைசியாக வெளிவந்த அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வசூல் ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அஜித்குமாரின் மகன் ஆத்விக்கின் பெயர் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அண்மையில், சென்னையின் FC Tshirt அணிந்து, தாய் ஷாலினியுடன் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒரு புறம் கவனம் ஈர்க்க, மார்ச் 2ஆம் தேதி ஆத்விக்கின் எட்டாவது பிறந்தநாள் ஆகும்.

ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அஜித் நற்பணி இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கியுள்ளனர்.

மேலும், விதவிதமாக bannerகளை வைத்ததோடு ட்விட்டரிலும் ‘குட்டி தல’ என்ற hashtag முன்னிலையில் ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் ஆத்விக் அஜித்தை போலவே இருப்பதாகவும் பல நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதை பரவலாக பார்க்க முடிகிறது.